Friday, September 14, 2012

பிறேமதாஸவே என்னை பிரித்தானியா அனுப்பி வைத்தார். தலையை சொறிகின்றார் ஜனா!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு தரப்பு அறுதி பெரும்பாண்மையை பெறாதநிலையில் ஆட்சியமைப்பதற்கு உதவியை நாடிநிற்கின்றது. முஸ்லிம்காங்கிரஸ்காரர் 7 ஆசனங்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஒரு ஆட்டு ஆட்டலாம் என ஒரு கணக்குப்போட்டனர். கணக்கோ தப்புக்கணக்காகி விட்டது. அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசிலுள்ள ஆட்களை தனித்தனியாக உள்வாங்க மேற்கொண்ட முயற்சிகள், தலைமையை ஆடவைத்துள்ளது. ஏற்கனவே உடைந்து போயிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மேலும் உடைந்தால் நிலைமை அதோ கதிதான் என கருதும் ஹக்கீம் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனும்நிலைக்கு சென்றுள்ளார்.

முஸ்லிம் முதலமைச்சர் எனக்கோஷமிட்ட முஸ்லிம்காங்கிரஸ் மஹிந்தரின் தமிழ் முதலமைச்சர் என்ற ஒரேமுடிவுக்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் வேறு பேரம்பேசல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசல் எல்லை மீறினால் அக்கட்சி மேலும் உடையும் என்பது அவதானிகள் கருத்து.

இதேநேரம் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் காரரை மாத்திரமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரரையும் இலக்கு வைத்துள்ளது, பிரித்தானியிவிலிருந்து வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றீட்டியுள்ள ரெலோ அமைப்பைச் சேர்ந்த ஜனா என்கின்ற கருணாகரத்திடம் சென்ற குழுவினரிடம் பேசிய ஜனா ' இலங்கை அரசாங்கம் ஒன்றும் எனக்கு புதிதானது அல்ல, அன்றிருந்த அரசாங்கத்திற்கு எவ்வளவு வேலை செய்திருக்கின்றேன். அவற்றுக்கு பிரதி உபகாரமாக என்னை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்ததும் அன்றையை ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாஸா தான், அவ்வாறு நான் பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டிருக்காக விட்டால் இங்கு புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பேன், இதற்காக நான் இலங்கை அரசாங்கங்கத்திற்கு நன்றி உடையவன், அரசாங்கத்துடன் இணைவதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் ஒருதடவை ஏனையோருடனும் பேசிவிட்டு வாங்களேன் யோசிப்பம்' என்று தலையை சொறிந்தாராம் என அன்னாருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அதாவது வீட்டை விட்டுவிட்டுபோனால் அடுத்தமுறை கதிரை காலியாக்கி விடும் அச்சத்தில் பலர் திண்டாடுவதாக அறிய முடிகின்றது. இதேநேரம் அடுத்தமுறை ஆசனம் என்பது அடுத்த கதை தற்போது இருக்கிற ஆசனத்தை வைத்து காட்டவேண்டிய வேலைத்திட்டங்களை இம்முறையே செய்தால் என்ன எனப் பலர் மந்திராலோசனையில் இறங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

நடக்கபோவது என்ன இலங்கைநெற்றுடன் இணைந்திருங்கள்..

1 comments :

ARYA ,  September 15, 2012 at 12:20 AM  

Well, i know this guy , he is second UP team of TELO, and killed many LTTE in Eastern province and then joined with UNP Premadase.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com