Saturday, September 15, 2012

சொறிக்கல்முனையில் உக்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனை பாலனாவெளி வயல் பிரதேசத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிக்கு சென்ற பிரதேச மக்கள் இதை கண்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

எரிந்த நிலையில் காணப்பட்ட எலும்புக்கூட்டுடன் இரட்டைப்பின்னலுடகூடிய மண்டைஓடும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரட்டை பின்னலிலிருந்து கொலைசெய்யப்பட்டுள்ளது பெண் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. மண்டை ஓடும் எலும்புக்கூடும் வௌ;வேறு இடங்களில் காணப்படுகின்றன. எலும்புக்கூட்டுக்கு அருகில் வெற்றுச்சாரயப்போல்தல்களையும் காணக்கூடியதாக உள்ளது.

குறித்த இடத்திற்கு விரைந்துள்ள சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக தடயங்களை திரட்டும் நோக்கில் வயல்வெளிப்பிரதேசத்தில் தேடுதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.


0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com