Saturday, September 15, 2012

மேர்வின் சில்வாவின் பாதுகாவலர்கள் அடாவடித்தனம். கோத்தாவிடம் முறைப்பாடு.

களனியில் வைக்கப்பட்டிருந்த கபிலவஸ்து புனித சின்னத்தைப் பார்வையிட வரும் பக்தர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் நடத்தச் சென்ற போது, அமைச்சர் மேர்வின் சில்வாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் வேறு பலரும் தமது மாகாண சபை செயலணியின் அலுவலர்களைத் தாக்கியதாக மேற்கு மாகாண உறுப்பினர் சிசிர ஜயக்கொடி பாதுகாப்புச் செயலாளருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதல் நடாத்தியவர்களைத் தமக்குத் தெரியும் என்று கூறிய அவர் தான் இது பற்றி களனி பொலிஸ மற்றும் பேலியாகொடை சிரேட்ட பொலிஸ அதிகாரிக்கும் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com