சரத்துடன் சேரமாட்டோம்! வேண்டுமென்றால் அவர் எங்களுடன் சேரலாம் – திஸ்ஸ
சரத் பொன்சேகா ஆரம்பிக்கும் கட்சிக்கு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ம.வி.மு ஆதரவில்லை என்று தெரியவருகி ன்றது. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், ஐக்கிய தேசிய கட்சி பிற கட்சிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு, எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்கி அரசாங்கத்துக்கு எதிராக போராட முனைந்துள்ளது என தெரிவிக்கின்றது.
எனவே சரத் பொன்சேகாவின் கட்சியும் இதில் இணைந்து கொள்ளலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். அத்துடன், தமது தனித்துவத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எதிர்வரும் தேர்தல்களில் தனித்துச் செயல்படப் போவதாக ம.வி.மு பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment