புலமை பரிசில் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் முடிவடைந்துள்ளன
5 ஆம் ஆண்டு புலமை பரிசில் வினாத்தாள் வெளியானதாக தெரிவிக் கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் வினாத்தாள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன. இந்த சோதனை மூலம் வினாத்தாள் வெளியானமை தொடர்பிலோ அல்லது மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பாகவோ எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக நாங்கள் பரீட்சை ஆணையாளருக்கு அறிவிக்கவுள்ளோம். யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு நபருக்கு இழப்பு ஏற்படும் விதத்திலோ, பாதிப்பை விளைவிக்கும் விதத்திலோ, அதிருப்தியடையும் வகையிலோ அல்லது இழப்பு ஏற்படும் வகையிலோ தகவல்களை தெரிவித்திருந்தால் அது தவறு எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பற்றி நாங்கள் ஆராய்வோம் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment