நோர்வேயில் பிள்ளை பிடிக்கின்றார்கள், மீட்டுத் தாருங்கள் கோத்தாவிடம் மனு. ச. ஜேசுநேசன்
நோர்வேயில் வசிக்கும் 60 தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகளை நோர்வே அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இவர்களை மீட்டுத் தாருங்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, யாழ்ப்பாண ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ராமநாதன் அங்கஜன் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்.
பிள்ளைகளுக்கு கையால் உணவூட்டுதல் சுகாதாரமற்ற செயல் என்றும், அவர்களைக் கொஞ்சுதல், அரவணைத்தல் என்பன பாலியல் சம்பந்தமுடையவை என்றும் சாக்குப் போக்கான காரணங்களைக் கூறியே நோர்வே அரசாங்கம் இப்படிச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறு அகற்றப்பட்ட 17 வயதுடைய ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது. பிள்ளைகள் நோர்வேஜியன் மொழி தவிர்ந்த, தாய் மொழியான தமிழ் உட்டபட வேறெந்த மொழியையம் பயனபடுத்தக் கூடாது என்று தடுக்கப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடு வந்துள்ளது.
தமிழரின் தாயகமான இலங்கையில் தமிழருக்கு உரிமையில்லை என்று கூறி வெளிநாடு சென்று மிக சொகுசாக வாழ்ந்து கொண்டு, இப்போது தமிழுக்கு அங்கு இடமில்லை என்று ஓலமிடுகிறார்கள். ஏன அவர்கள் இலங்கை திரும்பக் கூடாது. இங்கு தமிழ் நன்றாகவே இருக்கின்றது. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுத்திரேலியா உட்பட அனைத்து வெளிநாடுகளும் தத்தமது தாய்மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கும். அது இயற்கை. அந்த நாடுகளில் வாழச் சென்றவர்கள் அவர்களோடு ஒன்று கலப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் தமிழராக இருக்க விரும்பினால் இங்கு வந்துவிட வேண்டியதுதான். அதை விடுத்து நோர்வேயில் தமிழைக் காப்பாற்றுங்கள், நெதர்லாந்தில் தமிழைக் காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை. தமிழகமும் இலங்கையும் தான் தமிழரின் மரபுவழித் தாயகங்ள். வேறு நிலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்க்கை நடாத்துவதென்றால் தமிழை மறந்துவிட வேண்டும். தமிழனாக தமிழ் மொழி பேசுபவனாக வாழ வேண்டுமென்றால் தமிழ்நாடு அல்லது இலங்கையில்தான் அது முடியும்.
ஹிட்லர் போன்றவர்கள் இனியும் பிறக்க மாட்டார்கள் என்று கூற முடியாது. அப்படி நடந்தால், ஜெர்மனியில் யூதருக்கு நடந்ததுதான் பிறநாடுகளில் வாழும் தமிழருக்கும் நடக்கும். அவ்வாறான நிலைமை ஏற்படுமுன்னர் உலகத் தமிழர்கள் தமது மரபுரீதியலான தாயகத்துக்கு திரும்புவத்தான் நல்லது.. அதை விடுத்து அங்கிருந்து கொண்டு தமிழைக் காப்பாற்றுங்கள், தமிழரைக் காப்பாற்றுங்கள் என்பது வேடிக்கையானது. இங்குள்ள தமிழர்களையே காப்பாற்ற வக்கில்லாத தலைவர்கள் வெளிநாட்டில் உள்ள தமிழர்ளைப் காப்பாற்றுவார்கள் என்று ஓலமிடுவது அர்த்தமற்ற செயல்.
நோர்வேயில் இடம் பெறிருப்பது தொடரப் போகும் ஒரு நீண்ட வேலைத் திட்டத்தின் ஆரம்பமாகும். இது எல்லா வெள்ளையர் நாடுகளிலும் பரவலாம். யூதர்கள் சியோனிச இயக்கம் தொடங்கியது போல இலங்கைத் தமிழர் நாடு திரும்பும் படலத்தை (Tamil Repatriation) உடனே ஆரம்பிக்க வேண்டும். தமது பாரம்பரிய மண்ணை தெற்கத்தியவர்களிமிருந்து காப்பாற்ற வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழரையும் அவர்களின் மண்ணையும் காப்பாற்ற இதைவிட வேறுவழி இல்லை.
0 comments :
Post a Comment