பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை: பெரியார் தி.க.வினர் 50 பேர் கைது
பூந்தமல்லி மற்றும் செங்கல் பட்டு முகாம்களில் இலங்கை தமிழர்கள் பலர் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரியும், ம.தி.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இன்று பெரியார் திராவிட கழக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக குமணன்சாவடி பஸ் நிலையம் அருகில் கட்சியின் பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்கு அவர்கள் கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பின்பு பூந்த மல்லி கரையான்சாவடி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கோவை ராமகிருஷணன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரையும் பஸ்சில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
0 comments :
Post a Comment