இந்தோனேசியாவுக்கு நவீன போர் விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது.
ஆசியா பசிபிக்கடல் பகுதியிலுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா ரகசியமாக சில நாடுகளுடன் உடன்பாடு வைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தோனேசியாவிற்கு நவீன ரக போர் விமானங்கள், விமான தகர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது.இதன்படி எப்-16 ரக போர் விமானங்கள், ஏ.ஜி.எம்.-65 மாவெரிக் ஏவுகணைகள் ஆகியவற்றை வழங்கும்படி இந்தோனேசியா கேட்டு வருகிறது. சுமார் ரூ.3,750 கோடி அளவிற்கு இந்த ஆயுத சப்ளை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment