Friday, August 31, 2012

ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் உரிமைகள் மறுக்கப்படலாகாது

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு நாடுகள், சிறிய மற்றும் இலகுரக ஆயுதங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஆயுதங்களை கொள் வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் உரிமையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27, 28 ம் திகதிகளில் நடைபெற்ற "சகல வழிகளிலும் சிறிய மற்றும் இலகுரக ஆயுதங்களின் சட்டவிரோதமான வர்த்தகத்தை தடுத்தல், முறியடித்தல் மற்றும் ஒழித்தல்" வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் 2வது ஐ.நா மாநாட்டில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். அத்தகைய ஆயுதங்களின் சட்டமுரணான வர்த்தகம் காரணமாக 30 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை எனவும். ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் , சட்டமுரணான முறையில் இத்தகைய ஆயுதங்களைச் உலகளாவிய ரீதியில் பெருமளவில் பெற்று, இலங்கையின் சட்டபூர்வமான அரசாங்கத்துக்கு எதிராக அராஜகம் நடாத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது என சுட்டிக்காட்டினார்.

2006 ல் நடைபெற்ற அதன் முதலாவது மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com