Tuesday, August 7, 2012

ரணிலின் ஆடையைக் களையைத் தயார் - நவீன துச்சாதனன் மைத்திரிபால சிரிசேன

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் 1994 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் காமினி திசாநாயக்காவுக்கு எதிராக சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுக்கு தகவல் வழங்கியது பற்றி தான் கூறியது தொடர்பாக ஊடகத்தில் பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அது பற்றி நாளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ.ல.க. ஊடக மாநாட்டில் விடையளிக்கப்படும் என்று அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறுகிறார்.

அமைச்சரால் கூறப்பட்ட ஊசலாடும் கூற்று தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் தனக்கு ரணில் விக்கிரமசிங்க எவ்வித உளவுத் தகவலும் வழங்கவில்லை என்று கூறியிருக்கின்றார். ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, தான் வெளியிடப்பட்ட கூற்றை அமைச்சர் நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com