அணி சேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ளார்.
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் அணி சேரா நாடுகளின் 16 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் நோக்கி பயணமானார். அவர் இன்று அம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
மாநாட்டின் போது பல வெளிநாட்டு அரச தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அணி சேரா அமைப்பில் 120 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கண்காணிப்பு மட்டத்தில் 17 நாடுகள் இடம்பெறுகின்றன.
பெல்கிரேட்டில் இடம்பெற்ற முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட 25 நாடுகளுள் இலங்கையும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அணி சேரா நாடுகளின் 5 வது உச்சி மாநாடு 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாநாயக்க தலைமையில் இலங்கையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment