Saturday, August 25, 2012

கனடாவில் புலம்பெயர்ந்தவர்களே அதிகம் சொந்த வீடுகளை வைத்திருப்பர். ஆய்வுத் தகவல்.

புலம்பெயர்ந்தோர் கனடாவில் புது வீடு வாங்கி குடியிருப்பது சாதாரணமாகி விட்டது. இன்னும் பத்தாண்டுகளில் கனடாவை தாய் மண்ணாகக் கொண்டவர்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்தோரே அதிகமாக வீடு வாங்கியிருப்பர் என்று பொருளியல் வல்லுநர் பெஞ்சமின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் தகவல்களை கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ள அவர் கனடாவிற்குள் வரும் புலம்பெயர்ந்தோர் தங்களின் தொழில் திறமையால் வேலை பார்த்து முன்னேறி சொந்த வீடு வாங்குமளவிற்குப் பண வசதியும் பெறுகின்றனர் என்றும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை உயர உயர கனடாவில் சொந்த வீட்டுக்காரர்களின் எண்ணிக்கையும் உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலே புலிகளின் தலைமை ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து கனடாவில் புலிகளின் சொத்துக்களையும் நிதியையும் நிர்வகித்து வந்தோர் அவற்றை தமது சொத்துக்களாக்கியுள்ளனர். இவர்கள் கனடாவில் பல ஆடம்பர மாளிகளை கொள்வனவு செய்துள்ளனர். இம்மாளிகைகளில் நீச்சல் தாடகங்கள் உட்பட பல வசதிகளையும் அமைத்துக்கொண்டுள்ளனர். இந்நீச்சல் தடாகங்களின் தேவை தொடர்பாக கேட்டபோது, தலைவர் சுற்றிவர கடலும் ஏரிகளுகம் குளங்களும் இருந்தபோதும் தனக்கென நீச்சல் தடாகம் அமைத்து வைத்திருந்தவர் என்றும் தலைவன் வழியில் தாமும் நீச்சல் தடாகம் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைவன் வழியில் வீட்டுக்கு சிசிரிவி எனப்படுகின்ற பாதுகாப்பு கமராக்களை பொருத்தியும் உள்ளனர். நாட்டின் பாதுகாப்பு முற்றிலும் உறுதி செய்யப்பட்டுள்ள கனடாவில் தமிழ் தனியார் வீடுகளில் சிசிரிவியா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தலைவர் தான் தங்கியிருந்த மாளிகையிலும் சிசிரிவி க்கள் பொருத்தியிருந்தார். அவை இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தலை கவனிப்பதற்கு அல்ல தனது வீட்டில் தங்கியுள்ள மெய்பாதுகாவலர்கள் தான் இல்லாத நேரத்தில் ஏதாவது குரங்கு சேட்டைகள் விடுகிறார்களா என்பதை அறிவதற்கு. அவ்வாறே நம்மவர்களும் தாம் வீட்டில் இல்லாத நேரத்தில் என்ன நடக்கின்றது என்பதை அவறிவதற்காகவே இவ்வாறான பாதுகாப்பு கமராக்களை பொருத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

1 comments :

Anonymous ,  August 26, 2012 at 6:44 AM  

மிகச் சரியான செய்தி. கனடாவில் சாதாரணமாக ஒரு லேபர் வேலையை செய்துகொண்டு, அரை மில்லியனுக்கு மேல் வீடு வாங்குவதென்டால் ஏதோ ஒரு பின்னணி கட்டாயம் இருக்கவே வேண்டும்.
புலிகளையும், ஈழத் தமிழர்களையும் சாட்டி வசூலித்த பணம் எல்லாம் இன்று கனடா, மார்க்கம், வோன், பிரம்டன், ரிச்மன்ஹில், மொன்றியல், ஒட்டவா, வன்கூவர் என்று கனடாவில் வீடுகள், கடைகள், ரெஸ்டாரன்ட் என்று சொத்துக்களாகி விட்டன. ஆனால், கோவணத்துடன் விடப்பட்ட தன்மான தமிழீழ மக்களுக்கு ஒரு நேர உணவுக்கும் அப்பணம் கிடைக்கவில்லை என்பதையிட்டு மிகவும் வேதனையும், கவலையுமாக இருக்கிறது.
புலிக் கொடிபிடித்து, ஊர்வலம் போய், உண்டு உண்ணாவிரதம் இருந்த தமிழ்ழீழ பற்றாளர்கள், அமைப்புகள், மாணவர்வர்கள் எல்லோரும் மௌனிப்பதன் காரணம் என்ன???

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com