இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, August 14, 2012

ரணிலை வட்டமிடும் வாக்கு வங்கி அற்றவர்கள் – லால் பெரோ.

வாக்கு பெற்றுக் கொடுக்க வக்கில்லாத வர்கள்தான் ரணிலைச் சுற்றியிருக் கின்றார்கள் எனவும், அவர்களைத்தான் நடக்கவிருக்கும் மூன்று மாகாண சபைத் தேர்தகளிலும் வாக்கு வேட்டைக்கு ரணில் அனுப்பிருக்கிறார் எனவும், வாக்குச் சேகரிக்கும் வசீகரமுள்ள சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய மற்றும் பலரை அவர் ஓரங்கட்டியுள்ளார் என்று ஐ.தே.க மற்றும் அதன் தொழிற் சங்கங்களைக் காப்பாற்றும் அமைப்பின் செயலாளர் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், திஸ்ஸ அத்தநாயக்கா, காமினி ஜயவிக்ரம பெரேரா, அகில விராஜ், ரஞ்சன் ராமநாயக்க, ஹர்சா டி சில்வா மற்று மாகாண சபை உறுப்பினர்களான சாந்தினி கொங்காகே, முஜிபுர் ரஃமான் ஆகியோரையே ரணிலின் தேர்தல் கூட்டங்களில் உரையாற்ற முடிகின்றது என லால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறந்த பேச்சாளர்களான பிரேமதாச, ஜயசூரிய, தயாசிரி, மத்துமபண்டார, புத்திக, ரோசி மற்றும் தலதா அத்துகோரளை போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என லால் பெரேரா கவலைப்படுகின்றார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com