Friday, August 3, 2012

பேஸ்புக்கில் 83 ‌மி‌ல்‌லிய‌ன் பே‌ர் போலி கணக்கு!

தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தி‌ல் உள்ள சமூக வலை தளமான பேஸ்புக்‌‌ கண‌க்‌கி‌ல் 8.3 சத‌வீத‌ம் பே‌ர் போ‌லியானவை எ‌ன்று ‌‌பி‌‌பி‌சி செ‌ய்‌தி ‌நிறுவன‌ம் கூ‌றியு‌ள்ளது. லண்டனை சேர்ந்த பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், உலகம் முழுவதும் இணையதளத்தில் 955 ‌மி‌ல்‌லிய‌ன் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் 83 ‌மி‌‌ல்‌லிய‌ன் பே‌ர் பே‌ஸ்பு‌க்‌கி‌ல் போ‌லி பெய‌ரி‌ல் கண‌க்‌கி தொட‌ங்‌கி உ‌ள்ளன‌ர்.

ஏற்கனவே முறையான தகவல்களுடன் கணக்கு வைத்திருப்பவர்கள், போலி பெயரில் கூடுதலாக பேஸ்புக் கணக்கை தொடங்குவதும், போலி தனமாகும் மற்றும் விருப்ப‌மில்லாமல் பெருமைக்காக தகவல்களுடன் தொடங்கப்படும் கணக்கு ஆகும்.

அந்த வகையில் இணையதள மொத்த பயன்பாட்டாளர்களில் 1.5 சதவிகிதம் பேர் விருப்பம் இல்லாமல் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளன‌ர் எ‌ன்று அ‌ந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com