எல்ரிரியின் ஒரு நேர்மையான மரண விசாரணை.
A Candit post-motem of LTTE
The Prabhakaran Saga.
ஆசிரியர் : எஸ் முரளி.
வெளியிடுவோர் :: Sage Publishers
பக்கங்கள் : 362
இது ஒரு குருதியை உறைய வைக்கும், ஆனால் எல்ரிரிஈ மற்றும் அதன் தலைவரும், எதிரிகள் பிடிக்குமட்டும் தன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று நினைத்தவருமான வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி முழுமையாக அலசி ஆராயும் நூலாகும். முரளி தனது சிறந்த மொழி நடை மற்றும் அறிக்கையிடும் திறனைக் கொண்டு மிகவும் சிக்கலானதும் கால் நூற்றாண்டு காலம் நீடித்ததுமான இலங்கையின் தமிழ்ப் போரைப் பற்றி காலவரையறை கொண்ட அனால் படிப்பதற்கு இலகுவாகப் படைத்திருக்கின்றார்.
இரத்தம் தோய்ந்த கதையைப்பற்றி பதிவு செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் முரளி. ஒரு பத்திரிகையாளனாக, தமிழ் போராட்டத்துடன் அதன் சாதாரண ஆரம்பத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கின்றார்., அந்த நாடகத்தில் பிரபாகரன் உள்ளிட்ட சகல நடிகர்களையும் சந்தித்திருக்கின்றார். அவரின் உதவியாளர் அன்டன் பாலசிங்கத்துடன் பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார். போர் நடைபெற்றுக் கொணடிருந்த போது மீண்டும் மீண்டும் இலங்கைகு வந்திருக்கின்றார். ஒரு காலகட்டத்தில் அழிக்கப்பட முடியாது என்று காணப்பட்ட இயக்கம், கடைசியில் போரில் தோற்றதேன் என்பதை வெளிக் கொணர்கிறது இந்த நூல். அதற்கான ஒரு காரணம் அது தான் விரும்பியவாறு கொலை செய்வதில் நாட்டங் கொண்டிருந்ததாகும் என்கிறார் முரளி.
பிரபாகரனின் முதலாவது தவறு 1986 ல் தனக்குப் பகையான போராட்டக் குழுவின் தலைவரான டெலோவின் ஸ்ரீ சபாரட்னத்தைக் கொலை செய்ததுதான். அடுத்த மிக மோசமான கொலை 1991 ல் ஒரு பெண் தற்கொலைப் போராளியைக் கொண்டு ராஜீவ் காந்தியைக் கொன்றது. புலித் தலைவரின் இந்தச் செயல்தான் அவரது கவிழ்ப்பை நிரூபித்தது என்று முரளி கூறிகின்றார்.
இந்த அரசியல் படுகொலைக்குப் பின்னரும், 2008-09 ல் இடம் பெற்ற இலங்கை இராணுவத்தின் கடைசி அழிப்புப் போரில், தமிழ் நாட்டு மக்கள் புரட்சியில் கிளர்ந்தெழுவார்கள் என்று முட்டாள்தனமாக பிரபாகரன் நினைத்தார். அது நடக்கவில்லை. மாறாக புலிகளை அடக்குவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது.
' பிரபாகரனுக்கு பறையடிப்பவர்களைக் காட்டிலும், அந்த மாநிலத்து மக்கள் மேலான (அரசியல்) ஞானத்தைக் காட்டினார்கள், இந்தியா (தன்னைக் காப்பாற்றுவதற்குத்) தலையிடும் என்று கடைசி மட்டும் நம்பிக் கொண்டிருந்ததுதான் மிகப் துக்ககரமான விடயம்'.
தமிழ் மக்களுக்காக பிரபாகரன் தீவிரவாதத்தை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், ' காலவோட்டத்தில் அவர் மக்களின் தலைவராகி ஒரு சர்வாதிகாரியாக மாறினார். அவர் மக்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்களைத் தன்னோடு சித்திரவதை நிறைந்த வழியினூடாக ஈழம் நோக்கி இழுத்துச் சென்றார். கடைசியில் அது இல்லாததாகி விட்டது. 2005 ல் மகிந்தவை மிகச் சிறிய மேலதிக வாக்குகளால் வெற்றி பெறச் செய்து தனது அரசியல் வங்குரோத்து தனத்தைக் காட்டிக் கொடுத்தார். ஒரு சிங்கள கடும்போக்குவாதியான மகிந்த ஒரு போரைத் தொடங்குவார் என்றும் அதை எல்ரிரிஈ வெற்றி கொள்ளும் என்றும் அதை நியாயப்படுத்தினார்.
புதிய ஜனாதிபதி தனது பதவியில் நிலைகொள்ளு முன்னரே பிரபாகரன் அவரைச் சீண்டியதனால் ஒரு போர் ஆரம்பித்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் கிழக்கில் ஏற்பட்ட பிளவு எல்ரிரிஈ யின் பெரிய பலத்தை கொள்ளையிட்டுச் சென்றதை அவர் மறந்து விட்டார். எனவே 2006 ல் போர் மீள ஆரம்பித்த பின்னர் விரைவில் பிரபாபகரன் வரலாறாகி விட்டார்.
பிரபாகரனின் அளவுக்குப் பெரியதான தோற்றத்துக்கு பங்களிப்புச் செய்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு முரளி அனுதாபம் காட்டவில்லை.' தமிழ் நாட்டில் தனது பறையடிப்பவர்களான நெடுமாறன், வைகோ போன்றவர்களால் பூந்தோட்டப் பாதையில் வழிநடாத்திச் செல்லப்பட்டார்'
2007 ல் எல்ரிரிஈ தலைவர்களில் ஒருவரான எஸ். பி. தமிழ்ச்செல்வன் கொல்லப் பட்டபோது கண்ணீர்க் கவிதை வடித்த அப்போதைய முதலமைச்சர் தி.மு.க. துலைவர் கருணாநிதி மீது இந்த எழுத்தாளர் வெறுப்பு காட்டுகின்றார். எல்ரிரிஈ யினர் சக தமிழர்களைக் கொன்றொழித்த போது இதே கருணாநிதி மௌனம் காத்தார். இந்திய இராணுவம் இலங்கையில் என்று வெட்கமின்றிக் கூறினார், 1990 ல் இந்திய படையினர் தாய்நாட்டுக்குத் திரும்பியபோது அவர்களை வரவேற்க மறுத்தார். கடைசியாக, எல்ரிரிஈ கீழே விழும்போது, கருணாநிதியால் செய்ய முடிந்தது நகைப்புக் கிடமான முறையில் சென்னையில் காலையுணவுக்கும் பகலுணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் மேற்கொண்டது மட்டுமே.
0 comments :
Post a Comment