லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக சீனாவில் தயாரித்த சீருடைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு
லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அமெரிக்க வீரர்களுக்கு, சீனாவில் சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் 27ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் அமெரிக்க வீரர்களுக்கு, ரால்ப் லாரன் என்ற டிசைனர் சீருடைய வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த சீருடை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, வெள்ளை, நீல நிறத்தில் சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் 6 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராபர்ட் மெனன்டஸ் எம்.பி. கூறுகையில், அமெரிக்காவில் ஏற்கனவே 8 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். பல கம்பெனிகள் தங்கள் தொழிற்சாலை களை மூடி வருகின்றன. ஆனால், ஒலிம்பிக் போட்டிக்கான சீருடைகள் தயாரிக்கும் பணி சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் சீருடை தயாரிப்பு உள்பட எல்லா வேலைகளையும் அமெரிக்காவிலேயே செய்ய வேண்டும். இதுதொடர்பாக புதிய சட்ட மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்கு மற்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்Õ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி விட்டன. இதில் பங்கேற்கும் வீரர்கள் லண்டன் சென்றுள்ளனர். அவர்களுக்கான சீருடைகள் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட்டு விடும். இந்த நேரத்தில் சீருடைகளை மாற்ற முடியாது. எனினும், 2014ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சீருடைகள் இங்கேயே தயாரிக்கப்படும். எம்.பி.க்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment