அமெரிக்க படைவீரர்களின் பரிதாப நிலை.
இராணுவச் நடவடிக்கையில் உள்ளவர்கள் மற்றும் ஈராக், ஆப்கானித்தானில் இருந்து திரும்பிய வீர்ர்கள் சமுகப் பிரச்சினையாக நோக்கப்படுகின்றார்கள். இதனால் கடந்த 11 ஆணடுகளைவிட் 2012 முதல் ஆறுமாதத்தில் இராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது. முதல் 155 நாட்களில் 154 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன. போர் நடவடிக்கையின் போது இறப்பவர்களை விட இந்த தற்கலை மரணங்கள் 50% அதிகமாகும்.
இதே காலகட்டத்தில் ஆப்கானித்தானில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு 18 % அதிகரிப்பு தற்கொலையில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பெண்டகன் அறிக்கையை அடியொற்றி அசோசியேட்ட் பிரஸ் வெளியிட்ட தகவல் இது.
2001 ல் ஆப்கான் போர் ஆரம்பித்ததிலிருந்து 36 மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை இடம் பெற்றுள்ளது. 2005-2009 காலப்பகுதியில் மாத்திரம் 100க்கு மேற்பட்ட வீர்ர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குழப்பமான இந்த புள்ளிவிபரங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளின் போலியான மனிதத்தன்மையை பறைசாற்றுகின்றது. இவர்களே ஆப்கானித்தானிலும் ஈராக்கிலும் போர் நெருப்பை மூட்டியவர்கள். அவர்களைப் பொறுத்தளவில் போர்வீர்ர்கள் என்போர் பயன்படுத்தியபின் வீசியெறியப்படும் கருவிகளே.
இந்த தற்கொலைகள் தொடர்பாக அதிக அக்கறை செலுத்தும் சமூக அமைப்புகள், இந்த தற்கொலைகளை தடுப்பதற்கான ஒரேயொரு உண்மையான வழி முதலில் யுத்தத்தை நிறுத்துவதுதான் என்பதைக் கவனிக்க மறந்து விடுகின்றன. வழிவழியாக அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலவந்தமாகவோ ஆசைகாட்டியோ இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். இது பல்வேறு பொருளாதார மற்றும் சமூகப் அழுத்தங்கள் அமெரிக்க இளைஞர் சமுதாயத்தில் திணிக்கப்படுவதன் பெறுபேறாகும்.
அமெரிக்க முதலாளித்துவ வகுப்பினருக்காகத் தமது உயிரைக் கொடுக்க படைவீர்ர்கள் அனுப்பி வைக்கப்படும போது, அதிட்டவசமாக தாயகம் திரும்புபவர்கள் அங்கு தமது உடல் மற்றும் மன நன்மைக்காக தொடர்ந்தும் போராடவேண்டிருக்கிறது. இந்தத் தொகை அதிகரித்து வரும் நிலையில், சுமக்கமுடியாத அளவு சுமை பாரமானதாக இருக்கின்றது.
0 comments :
Post a Comment