அம்பாறையில் ரிஎன்ஏ க்கு வேட்பாளர்கட்கு தட்டுப்பாடாம்!
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு கட்சிகள் முட்டி மோதிக்கொள்கின்றன. தமிழரசுக் கட்சியே பிரான கட்சி என சம்பந்தனர் குழுவினர் அடம்பிடித்து ஏனையோரை ஒதுக்கும் வேலைத்திட்டங்களை முடிக்கியுள்ளனர். மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலிலுள்ள 14 இடங்களில் 9 இடங்களையும் திருமலை மாவட்டத்திற்கான 13 இடங்களில் 10 இடங்களையும் சுருட்டிக்கொண்டனர்.
ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கட்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் பங்கு கட்சிகளிடம் தங்களுக்கு தேவையான அளவு வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம் என தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளபோதும், அவர்களிடமும் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை என உட்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இந்நிலையில் எந்தவகையிலும் தகுதியற்றவர்கள் எழுந்தமானமாக தெரிவுசெய்யப்பட்டு பட்டியல் நிரப்பப்படும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment