Friday, July 27, 2012

சுவிஸ் பொலிஸாரின் புலிவேட்டை கட்டம் இரண்டு. உயர்மட்ட குழு ஒன்று இலங்கை வருகின்றது.

போருக்குப் பின்னரான எல்ரிரிஈயின் செயற்பாடுகள் பற்றிய விசாரணை ஒன்றை மேற்கொள்ள உயர்மட்ட சுவிஸ் குழு விரைவில் இலங்கை வருகின்றது என சுவிற்சர்லாந்தின் பத்திரிகைச் செய்தியொன்றை ஆதாரம்காட்டி ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் எல்ரிரிஈயின் செயற்பாடுகள் பற்றி விசாரணை செய்வதற்கு சுவிஸ் சமஷ்டி அரச வழக்குகுத் தொடுனர் அலுவலகம், சுவிஸ் சமஷ்டி குற்றப் பொலிஸ், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் எதிர்காப்பு சட்ட அலுவலகங்களைச் சேர்ந்த சுவிட்சர்லாந்து அதிகாரிகள் எல்ரிரிஈயினரின் செயற்பாடுகள் பற்றி விசாரணை செய்வதற்கு இலங்கை வரவிருகின்றனர். அவர்கள் 26 சாட்சிகளிடம் விசாரணை நடாத்துவார்கள். சமஷ்டி வழக்குத் தொடுனர்களின் கொழும்பு நோக்கிய பயணம் என்ற தலைப்பில் Neue Zurcher Zeitung என்ற பிரபல சுவிஸ் செய்தியிதழில் ஜூலை 20 ல் அன்ரீஸ் ஸ்கிமிட் எழுதியிருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்ரிரிஈயின் சுவிஸ் கிளைக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் முறைபாட்டை அப்படியே விட்டுவிட எந்தவித முயற்சியும் சமஷ்டி வழக்குத் தொடுனர்கள் செய்யவில்லை.. தமிழ்ப் புலிகளின் சந்தேகப்படும் குற்றச் செயற்பாடுகள் பற்றி இதுவரை 120 சாட்சிகளிடம் சுவிசில் விராரணை நடாத்தப்பட்டுள்ளது. சட்டமுரணான முறையில் நிதி வசூலித்தல் வேண்டுமென்றே திசைதிருப்பப்பட்டுள்ளது. 130 எடுத்துக்காட்டுகளில் 70,000 – 100,000 வரையிலான சுவிஸ் பிராங்குகள் தமிழ் புலிகளால் இலங்கையில் அவர்களது சண்டைகளின் போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 30 பேர்களிடம் விசாரணை முடியவில்லை.

15 பேரைக் கொண்ட சுவிஸ்குழு இலங்கையில் செப்டம்பர 3 முதல் 12 வரை இலங்கையில் விசாரணை நடாத்தும். ஒவ்வொரு சாட்சியினதும் வாக்குமூத்தை ஒரு பொலிஸ் அலுவலர் பதிவு செய்வார். பணத்தையும் நேரத்தையும் மீதப்படுத்துவதற்காக இரண்டு வாக்குமூலங்கள் சமநேரத்தில் வழக்குத் தொடுனராலும் எதிர்காப்பு சட்ட அலுவலராலும் பதிவு செய்யப்படும்.

சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களிடம் மிரட்டிப்பணம் பறித்தனர் என்ற சந்தேகத்தின்பேரில் அந்நாட்டின் புலிச்செயற்பாட்டாளர்கள் பலரை கடந்தவருடம் கைது செய்த சுவிஸ்பொலிஸார் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ்விசாரணைகள் இடம்பெறும் என நம்பப்படுகின்றது. கைது செய்யப்பட்ட புலி செயற்பாட்டாளர்கள் தாம் மக்களிடம் அறவிட்ட பணத்தை வன்னிக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்துள்ளனர். ஆனால் வன்னியில் நிதித்துறை மற்றும் தொடர்புபட்ட துறைகளைச் சேர்ந்தோர் தற்போது இலங்கை அரசின் காவலிலும் மற்றும் புனர்வாழ்வின் பின்பும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர் உண்மையில் இப்பணம் அங்கு அனுப்பப்பட்டதா என உறுதி செய்வதற்கு வாய்ப்புகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் புலிகள் மக்களிடம் அறவிட்ட பணத்தை கொண்டு இலங்கையில் அசையாச் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர். இவைதொடர்பான தகவல்களும் திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 comments :

Anonymous ,  July 28, 2012 at 8:30 AM  

வாழ்க சுவிஸ் பொலிஸ் குழு! உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
இவ்வளவு காலமும் எங்களை மிரட்டி, ஏமாற்றி, பணம் பிடுங்கியது மட்டுமல்ல தமிழீழ மக்களையும், வளங்களையும் கொன்று, அழித்து, மிஞ்சிய மக்களை வெறும் கோவணத்துடன் நடுத்தெருவில் விட்டது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக தமிழினத்தையும் நடுத்தெருவுக்கு இழுத்து, புலிக்கொடி பிடித்து நாறு, நாறு என்று நாறடித்தது மட்டுமல்ல,
தங்களின் பரம்பரை வாழ்வுக்கே பணம், சொத்து, சுகம் ஓசியில் சுருட்டி, சேர்த்த கொடிய தமிழ் இனத்துரோகிகளை கைது செய்து, அவர்களின் கள்ள சொத்து, பணம், குடியுரிமை எல்லாவற்றையும் பறிமுதல் செய்து விட்டு, அவர்களை காலம் தாழ்த்தாது குடும்பத்துடன் ஸ்ரீலங்கா அரசிடம் மிக விரைவில் ஒப்படைக்கும் படி மிகவும் தாழ்வுடன் வேண்டிக்கொள்கிறோம். சுவிஸ் பொலிஸ் குழுவுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

உங்கள் நேர்மை, நீதி, நியாயமுள்ள,
ஒழுங்கு, பண்பு, பகுத்தறிவுள்ள சுவிஸ் வாழ்தமிழினம்.

Anonymous ,  July 28, 2012 at 10:18 PM  

ஒட்டுமொத்த உலக தமிழினத்தையும் நடுத்தெருவுக்கு இழுத்து, புலிக்கொடி பிடித்து நாறு, நாறு என்று நாறடித்தது மட்டுமல்ல,
தங்களின் பரம்பரை வாழ்வுக்கே பணம், சொத்து, சுகம் ஓசியில் சுருட்டி, சேர்த்த கொடிய தமிழ் இனத்துரோகிகளை கைது செய்து, அவர்களின் கள்ள சொத்து, பணம், குடியுரிமை எல்லாவற்றையும் பறிமுதல் செய்து விட்டு, அவர்களை காலம் தாழ்த்தாது குடும்பத்துடன் ஸ்ரீலங்கா அரசிடம் மிக விரைவில் ஒப்படைக்கும் படி மிகவும் தாழ்வுடன் வேண்டிக்கொள்கிறோம். சுவிஸ் பொலிஸ் குழுவுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

உங்கள் நேர்மை, நீதி, நியாயமுள்ள,
ஒழுங்கு, பண்பு, பகுத்தறிவுள்ள சுவிஸ் வாழ்தமிழன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com