Friday, July 27, 2012

இறால் பண்ணையைப் பறித்தார் கருணா அம்மான்! உயர் நிதீமன்றில் வழக்குத் தாக்கல்.

கொக்கட்டிச்சோலை அவரின் ஆள்புலம். அங்கு அனைவரும் அவரது அடியாட்கள்.

மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் என்பவருக்கு எதிராக, பேர்ள் ஃபாம்ஸ் (பி) லிமிட்டட் என்ற கம்பனியால் அமைக்கப்பட்ட ஓர் இறால் பண்ணையை பலவந்தமாகக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதியான முரளிதரன் அந்தக் கம்பனியின் மூன்று பணிப்பாளர்களில் ஒருவர். மற்றிருவரும் வாதிகளான முருகேசு ரவீந்திரராஜா மற்றும் சிந்துபாரதி சிற்சொரூபன் ஆகியோர் வழக்காளிகளாவர்.

முன்னாள் எல்ரிரிஈ கிழக்குத் தளபதியான முரளிதரனுடன் சேர்ந்து மற்றிருவரும் மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலைய்ல 541 ஏக்கர் நிலத்தில் இறால் பண்ணையமைக்கத் திட்டமிட்டனர். சமமான முதலீட்டைச் செய்வதாக முதலில் இணங்கிய போதிலும், பிறகு முரளிதரன் தன்னால் காணியை மட்டுமே வழங்க முடியும் பணமுதலீட்டை மற்றிருவரும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை நம்பி அவ்கள் இருவரும் 70 மில்லியன் ரூபாவரை பண முதலீடு செய்துள்ளனர்.

இந்த பங்குதார்கள் இருவரும் பண்ணைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது முரளிதரனின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் நீதி கேட்டு 2012 மார்ச்சு 23 ம் திகதி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். முரளிதரன் மற்றும் பேர்ள் ஃபாம் (பி) லிமிட். பிரதிவாதிகளாவர்.

இறால் பண்ணை பற்றிய எந்த அறிவும் முரளிதரனுக்கு இல்லாததால் ரவிந்திராஜாவும், சிந்துபாரதியின் தந்தை ரூபனும் பண்ணையின் ஆரம்ப வேலைகளை மேற்கொண்டனர். அமைச்சர் முரளிதரனின் விருப்பப்படி அவரது 90 ஆதரவாளர்கள் அதில் வேலைக்கமர்த்தப்பட்டனர். முதலில் 200 ஏக்கரில் பண்ணையை ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு அமைய பண்ணைக்கான குளங்களை அமைப்பதற்கும் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும், வாடகைகுப் பெறுவதற்குமாக 15 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு சிலாபத்தில் உள்ள ஷிரிம்ப் பிரீடர்ஸ் அசோசியேசனில் இருந்து 10,395,000 ஸ்ரீ ரூபா பெறுமதியான 23,602,000 இறால' குஞ்சுகளைக் கடனாகப் பெற்றிருக்கிறார்கள். அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்ட்டிருப்பதால், கிப்பிட்ட அசோசியேசனின் தலைவர் பிரியந்த லொவ் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் இறால்கள் பேர்ள் பண்ணைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 2012 மார்ச்சு வரை பணத்தைச் செலுத்தாததால் மேற்படி அசோசியேசன்ஸ் பணத்தைக் கேட்டு பேரள் பண்ணைக்கு எழுதியிருக்கிறது.

அதேவேளை, 14,216,625 ஸ்ரீ ரூபா பெறுமதியான இறால் உணவை நிகோ இன்ரனேசனல் (பி) லிமிட்டட்டிலிருந்து 2011 திசம்பர் முதல் 2012 மாரச்சு வரை பேர்ள் பண்ணை கடனுக்குக் கொள்வனவு செய்திருக்கிறது. இதில், 5.4 மில்லியன் ரூபாவைமேற்படி பண்ணை மீளச் செலுத்தியிருக்கிறது. அத்துடன் ரவீந்திராஜாவுக்குச் சொந்தமான ரவி இன்வெஸ்ட்மென்ட் (பி) லிமிட்டட்டிடமிருந்து 5.6 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு உணவு கொன்டெய்னர்களை இறக்குமதி செய்துள்ளது. பேர்ள் பண்ணையின் மூன்று பணிப்பாளர்களில் இருவர் 70 ல்லியன் ரூபாவுக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். மூன்றாமவரான அமைச்சர் முரளிதரன் காணியைமட்டுமே வழங்கியுள்ளார்

அதேநேரத்தில், 2012 ஜனவரியில் தனக்கு செயற்றிட்டத்திலிருந்து வரவேண்டிய தொகை மதாந்தம் 1.5 மில்லியன் ரூபா வீதம் தனது இலங்கை வங்கி கணக்கு இலக்கம் BOC 70982868 ல் வைப்புச்செய்ய வேண்டும் என்று முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி வைப்புச் செய்யப்பட்டதாக வங்கிப் பற்றுச் சீட்டுகளையும் வழக்காளிகள் சமர்ப்பித்துள்ளனர். அத்துடன் தனது ரவி இன்வெஸ்டமென்ட் (பி) லிமிட். ஊடாக ரவீந்திரராஜா 3 மில்லியன் ரூபா பெறுமதியான புல்டோர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியதோடு 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பெக்கோ இயந்திரமும் பிரிமேஜ் ஹோல்டிங்சிலிருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டுளது.

இந்த, நிலையில் இந்த இறால் பண்ணை முரளிதரனால் பலவந்தமாக மார்ச்சு மாதம் கைப்பற்றப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடனாவிலிருந்து வரும் தனது மகன் சிதுபாரதியை வரவேற்க பண்ணையின் இன்-ஹவுஸ் மனேஜரான ரூபன் மா 4 ம் திகதி கொழும்பு சென்றிருந்த வேளை அமைச்சர் முரளிதரன் 5 ம் திகதி பண்ணைக்குச் சென்று மனேஜராக இருந்த கோகிலவாணனை நீக்கிவிட்டு, காவற்காரனாக இருந்த மதன் என்ற தனது ஆதரவாளனை புதிய மனேஜராக நியமித்துள்ளார். ரவீந்திரராஜாவும் ரூபனும் மாரச்சு 12 ம் திகதி பண்ணைக்குச் சென்ற போது அவர்களை பண்ணைக்குள் நுழையவிடாது தடுத்த மதன், முரளிதரனுடன் பேசுமாறு கூறியுள்ளார். அதே நாளில், தமக்கான பலமில்லியன் ரூபா வருமதியை வசுலிப்பதற்காக பிராவ்ன் பிரீடர்ஸ் தலைவரும் பல பிரதிநிதிகளும் அந்த பண்ணைக்குச் சென்றுள்ளனர். நிலைமை பற்றி முரளிதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின் அவரது கட்டளைப்படி மேலும் 10 பேர்களுடன் சேர்ந்து அவர்களை அச்சுறுத்தி ரவீந்திர்ராஜாவின் JW-9999 இலக்க வாகனத்தையும் அடித்து நொருக்கியுள்ளார். இது பற்றி கொக்கட்டிச் சோலை பொலிசில் செய்த முறைப்பாட்டின் இல. MOIB 207/89.

தமது முதலீட்டை திரும்பப் பெறுவதற்கும் பிராவ்ன் பிரீடர்ஸ் மற்றும் பிராவ்ன் ஃபீட் வழங்குனர்களுக்குமான கடனைச் செலுத்துவதற்கும் தமக்கு உதவ செய்யுமாறு ரவீந்திரராஜாவும் சிந்துபாரதியும் தமது பிராதில் நீதிமன்றை வேண்டியுளனர். அத்துடன், மூன்று பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன்தான் அறுவடை நடக்க வேண்டும் என்றும், சிக்கலான சில மாதங்கள் இறாலைப் நன்றாகப் பராமரிக்காவிட்டால் அறுவடையில் பலமில்லியன் ரூபா நட்டம் தமக்கு ஏற்படும் என்றும் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்த முடியாது போய்விடும் என்றும் தமது பிராதில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பிரச்சினை நீதி மன்றம் சென்றுள்ளதால் இரண்டு முதலீட்டாளர்களாலோ வழங்குனர்களாலோ தமது மில்லின் கணக்கான ரூபா பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இருப்பினும் பேர்ள் ஃபாம் (பி) கம்பனியின் சகல உறுப்பினர்களும் சமூகமளிக்காமல் இறால் அறுவடை செய்ய முடியாது என்று நீமன்றும் தடைசெய்கட்டளை பிறப்பித்துள்ளது.

சிலாபம், ஷிரிம்ப் பிரீடர்ஸ. அசோசியேசன் தலைவர் லொவ் தமக்கு பிரதியமைச்சர் முரளிதரன் ஒரு பணிப்பாளராக இருக்கும் பிராவ்ன் ஃபாமிலிருந்து தமக்கு வரவேண்டிய தொகை பற்றி ஜனாதிபதி அவர்களுக்கும் முறைப்பாடு செய்துள்ளார். தாங்கள் கொக்கட்டிச்சோலைக்கு போனபோது தாமும் தாக்கப்படுவோம் என்று பயந்ததாகவும், ஆனால், ரவீந்திரஶhஜாவின் வாகனத்தை அவர்கள் தாக்கியதாகவும் கூறுகின்றார் லொவ். கொக்கட்டிச்சோலை முரளிதரனின் ஆட்சிப் பிரதேசமாக இருக்கிறதென்றும் அவரது கட்டளையை ஒவ்வொருத்தரும் நிறைவேற்றுகிறார் அங்கு சென்ற அந்த அசோசியேசனின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

முரளிதரனோடு தெடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது கைகூடவில்லை யென்றும் அவருக்கு அனுப்பியடெக்ஸ்ட் செய்திக்கும் பதிலில்லை என்று சண்டே லீடர் கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com