முன்னாள் எல்.ரி.ரி.ஈ யினரும் உள்ளுராட்சி தேர்தல் களில் போட்டியிடலாம் - கோட்டாபய ராஷபக்ஷ்
தற்போது தேசிய மற்றும் உள்ளுராட்சி அரசியலில் ஈட்பட்டிருக்கும் முன்னாள் சிரேஷ்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் மாத்திரமன்றி, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடலாம் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ தெரிவித்துள்ளார்.
தியதலாவ இராணுவ பயிற்சி முகாமில் வெளிநாட்டுத் தூதர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார். இதன்போது இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள், பணயக் கைதிகளாக பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300,000 அப்பாவி மக்களை காப்பாற்ற பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள், கடல் மார்க்கமாகவும் விமானங்கள் மூலமும் காயப்பட்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் அனுப்பட்டமை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் விரிவாக விளக்கினார்.
மேலும் இச் செயற்பாடுகளின் போது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் தொடர்பாகவும் கூறினார். விஸ்வமடுவில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுதாக்குதல் மூலம் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் கொலைசெய்யப்பட்டனர்.
அத்துடன், புதிதாக திறக்கப்படவிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் சகல சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டுள்ளது எனவும், எந்தவித தடையுமின்றி மக்கள் எங்கும் நடமாடலாம் என தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு கருதி பலாலி முகாமைச் சுற்றியுள்ள ஒரு பகுதி மாத்திரம் பேணப்படுகின்றது. அதைச் சூழவுள்ள 17 கிராம சேவையாளர் பிரிவுகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கோட்டாபய ராஷபக்ஷ தொவித்துள்ளார்.
இலங்கையில ஏற்பட்டுவரும் அமைதியான முன்னேற்றங்களை சர்வதேச சமூகம் அறியச் செய்ய வேண்டும் எனவும், சர்வதேச சமூகத்தை தவறான வழியில் இட்டுச் செல்வதற்காக தமிழ் புகலிடக்காரர்களில் ஒரு பகுதியினர் இலங்கை மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தினர் இலங்கை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் முகமான, புலம்பெயர் மக்களின் ஒரு தொகுதியனர் வெளிநாடுகளில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரதானி ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எச்கேஜீ.ஹென்த்விதாரன மற்றும் கேனல் சலே ஆகியோர் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர்.
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டிலான் பெரேரா, பிரியங்கர ஜயரத்ன, ரெஜினோல்ட் குரே, பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment