Sunday, June 17, 2012

சிறிதரனுக்கு தாயாராகும் குற்றப்பத்திரிகை.

தமிழ் அரசியல் வட்டாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக விளங்குகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கான குற்றப்பத்திரிகையை கைநீட்டி வாங்கும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் யாவும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவரின் மேற்பார்வையில் முடிவுற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. சிறிதரன் அரசியலில் பிரவேசித்தது முதல் தமிழ் மக்களின் வாக்குகளை சுவிகரிப்பதற்காக அவர் இலங்கையின் இறைமைக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் நற்பெயருக்கு எதிராக அவர் திருவாய்மலர்ந்தருளிய வார்த்தைகள் சாட்சியங்களாக நீதிமன்றில் குவிக்கப்படும் எனவும் அறியக்கிடைக்கின்றது.

மேற்படி நடவடிக்கை கருந்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கோஷங்கள் எழுப்பப்படலாம். ஆனால் கருத்துச் சுந்திரத்தின் பெயரல் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை உணர்ச்சி ஊட்டி இனங்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைத்து இதுவரை காலமும் தமது பாராளுமன்ற கதிரைகளை தக்கவைத்து அதன்மூலம் இடைக்கப்பெறும் சுகபோகங்களை அனுபவித்து கொண்டுவருகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் ஏமாற்றுதலிலிருந்து தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமாயின் தமிழ் அரசியல்வாதிகள் நீதிக்கு புறம்பாக தமிழ் மக்களுக்கு கூறும் வீராப்பு வசனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிக்கு புறம்பானவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என தமிழர் தரப்பால் தொடர்சியாக விடுக்கப்பட்டுவந்த நெடுநாள் வேண்டுகோள் நிறைவுக்கு வருகின்றது.

'சிவஞானம் சிறிதரன் ஆகிய நான், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் இலங்கையின் ஆள்புலத்திற்கு உள்ளாக தனி அரசு ஒன்று ஸ்தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ அதரவளிக்கவோ ஆக்கமளிக்கவோ உக்குவிப்பு அளிக்கவோ நிதி உதவவோ ஊக்குவிக்கவோ பரிந்துரைக்கவோ மாட்டேன் என்று பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கின்றேன் சத்தியம் செய்கின்றேன் ' என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு தனது அரசியலுக்கான ஒரே மூலதனமாக இனவாம் பேசுவதையே கொண்டுள்ள இந்த சிறிதரன் யார்?

அரசியல் பிரவேசம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ் ஊடாகவே (ஈபிஆர்எல்எப் ற்கான தேர்தல் வேட்பாளராக) தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நுழைந்த இவர் தேர்லில் வெற்றி பெற்ற பெற்ற மறுகணமே சுரேஸை காய்வெட்டி விட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முன்னாள் ஆயுததாரிகளை வெளியேற்றவேண்டுமென்ற சதியின் சூத்திரதாரிகளில் முக்கியமானவராகவும் திகழ்கின்றார்.

தேர்தல் வாக்குறுதி

இவர் தனக்கான விருப்பு வாக்குகளுக்கான தேர்தல்பிரச்சாரத்தின்போது தான் தெரிவு செய்யப்பட்டால் வடகிழக்கு பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள முன்னாள் புலிகளை அடக்கம் செய்யப்பட்டிருந்த இடங்களை (புலிகளின் பாஷையில் மாவீரர் துயிலும் இல்லம்) மீளமைப்பேன் என தெரிவித்திருந்தார். இலங்கையில் பயங்கரவாதிகள் என சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பின் அடையாளங்களை இவரால் எவ்வாறு கட்டி எழுப்ப முடியும்? இது முடியாத காரியம் என தெரிந்திருந்தும் இவர் மக்களுக்கு தவறான வாக்குறுதியை வழங்கினார். ஆனால் இன்றுவரை அது தொடர்பான எந்த பேச்சுக்களும் இல்லை.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு பங்களிப்பு

புலிகளியக்கத்தில் இணைந்து ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டதாக அறியப்படும் இவர் அவ்வியக்கத்திலிருந்து விலகிக்கொண்டு தனது கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளுடன் தொண்டராசிரியராக வன்னயில் பணிபுரிந்தாக களவான சிபாரிசினை கொண்டு ஆசிரியரானதுடன் தான் கற்பித்த பாடசாலையிலிருந்த மாணவர்கள் பலரை புலிகளியக்கத்தில் இணையுமாறு நிர்பந்தித்து புலிகளின் நற்பெயரை சம்பாதித்தது மாத்திரமன்றி புலிகளை கொண்டு கிளிநொச்சி மாவட்ட கல்வித் திணைக்கள இயக்குநருக்கு அழுத்தங்களை பிரயோகித்து குறிப்பிட்ட பாடசாலையின் அதிபராகவும் தரமுயர்வு பெற்றுள்ளார்.

அதிபர் தொழிலை விடுத்து ஐசிஆர்சி யின் ஒற்றனானா கதை.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மகத்தான தொழிலைத் துறந்து பணத்திற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் ஊழியனாக இணைந்து கொண்ட சிறிதரன் வன்னியில் புலிகள் தொடர்பான பல ரகசியங்களை சர்வதேச சங்கத்தினருக்கு வழங்கியதான சந்தேகத்தின்பேரில் புலிகளின் புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டபோது உறவினரான கேணல் தீபனின் தலையீட்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் சேவை செய்வதற்கு மகத்தான தொழிலை விட்டுவிட்டு ஐசிஆர்சியில் பணத்திற்காக இணைந்து கொண்ட இவர் தற்போது அரசியலில் நுழைந்தது பணம் பண்ணுவதற்காகவே.

பணம் பண்ணுவதற்காக அரசியலில் இணைந்த இவர் நாட்டின் இறைமையை மீறி இனங்களிடையே குரோதத்தை உண்டு பண்ணி வருகின்றார்.

புலம்பெயர் புலிகளின் பொய்பிரச்சாரத்திற்கு துணை

புலம்பெயர் நாடுகளுக்கு செல்லும் சிறிதரன் அங்கு புலிகளின் எச்சங்களை சந்தித்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குவதுடன் அவர்களின் பொய்பிரச்சார ஊதுகுழலாகவும் செயற்பட்டு வருகின்றார். மேலும் இலங்கையின் பாராளுமன்று அதன் உறுப்பினர்களுக்கு வழங்கயுள்ள சிறப்புரிமைகளை பயன்படுத்தி புலம்பெயர் தேசத்திலுள்ள இலங்கையின் இறைமைக்கு எதிரான ஊடகங்களுக்கு செய்தி வழங்குபவராகவும் செயல்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

2 comments :

ARYA ,  June 18, 2012 at 3:20 AM  

Lankasri and tamilwin.com owned by his own Brother Srikugan Sivagnanam , living in Kanton thurgau in Switzerland, who do propagandha for Brother MP, i will give more infrmation about them, and they originalty not from vanni or Kilinochchi, they r from island side PUNGUDUTHIVU, where gor married Terrorist V.Prabaharan.

இலங்கைநெற் June 18, 2012 at 10:43 AM  

Mr. Arya

Please contact us on skype Id ilankainet or ilankainet@gmail.com

Editorial

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com