இலங்கை சுங்கத் திணைக்களம் ஹம்பாந்தோட்டை துறைமுக சேவைகளை ஆரம்பித்துள்ளது
இலங்கை சுங்கத் திணைக்களம் ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக வளாகத்தில் தனது சேவைகளை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளது.சுங்கப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நெவில் குணரட்ன தலைமையில் சுங்க காரியாலயம் துறைமுக வளாகத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது
கொழும்பு துறைமுகத்தில் நிலவும் அதிக நெரிசல் காரணமாக வாகனங்களை கொண்டுவரும் கப்பல்கள் வெளித்துறைமுகத்தில் நீண்ட நாட்களாக நங்கூரமிட்டு தரித்து நிற்கவேண்டிய நிலை முன்னர் ஏற்பட்டது.
இதனால், வாகனங்களை இறக்குமதி செய்வோர் கப்பல் நிறுவனங்களுக்கு தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டி ஏற்பட்டது.
வாகனங்களை ஏற்றிக் கொண்டுவரும் கப்பல்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்புவதன் மூலம் இந்த சிக்கல் நிலைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இந்த செயற்பாடுகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
15 வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஜப்பானிலிருந்து வந்த கப்பலொன்றில் இருந்து வாகனங்கள் இறக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment