தென் ஆப்ரிக்காவில் தீபாவளியை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்
தென் ஆப்ரிக்காவில் தீபாவளியைக் கொண்டாட அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும், என்று தென் ஆப்ரிக்க இந்து மகாசபை அந்நாட்டு அரசிடம் கோரியுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் திருவிழாவுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களும், முஸ்லிம்களும் கணிசமான அளவில் இந்த நாட்டில் இருப்பதால், தங்கள் கலாசார திருவிழாவுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
தென் ஆப்ரிக்க இந்து மகாசபைத் தலைவர் அஸ்வின் திரிகாம்ஜி இது குறித்து குறிப்பிடுகையில், 'இந்துக்கள் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அன்றைய தினம் இங்குள்ள நிறுவனங்கள் இந்துக்களுக்கு விடுமுறை அளிக்க மறுக்கின்றன. எனவே, அன்றைய தினத்தை பொது விடுமுறையாக தென் ஆப்ரிக்க அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இந்த விழாவில் மற்ற மதத்தினரும் பங்கேற்க வழி ஏற்படும்' என தெரிவித்துள்ளார். முஸ்லிம்களும் பக்ரீத் திருவிழாவுக்கு, பொது விடுமுறை அறிவிக்க வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment