Sunday, June 10, 2012

கொழும்பில் ஆரம்பமாகியுள்ள 15ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழா

இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழா இம்முறை சுகததாச உள்ளக விளை யாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இது எதிர்வரும் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

1986ம் ஆண்டு இந்தோனேஷியா ஜகார்த்தாவில் ஆரம்பமான ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் இம்முறையே முதன் முறையாக இலங்கையில் நடைபெறுகின்றன.

1986 முதல் இதுவரை 14 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தோனேஷியாவில் மூன்று தடவைகளும், சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு தடவைகளும் இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இம்முறையே கூடுதலான நாடுகள் (33 நாடுகள்) பங்குபற்றுகின்றன.

இதுவரை இலங்கை வீரஇ வீராங்கனைகள் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கம் பெற்றோர் விபரம்

1988 - பெனிஸ்டஸ் பெர்னாந்து நீளம் பாய்தல் வெண்கலப்பதக்கம்

1994 - தமயந்தி தர்ஷா 100 மீற்றர் ஓட்டம் தங்கப் பதக்கம்

' - சுசந்திகா ஜயசிங்க 100 மீற்றர் வெள்ளிப் பதக்கம்

' - சுசந்திகா ஜயசிங்க 200 மீற்றர் தங்கப்பதக்கம்

' - தமயந்தி தர்ஷா 200 மீற்றர் வெள்ளிப்பதக்கம்

2000 - 400 மீற்றர் அஞ்சலோட்டம் வெண்கலப்பதக்கம்

2004 - ஷெஹான் அபேபிட்டிய 100 மீற்றர் வெள்ளிப் பதக்கம்

' - ஜனக வீரசிங்க 800 மீற்றர் வெண்கலப்பதக்கம்

2010 - எரங்கா துலக்ஷி 3000 மீற்றர் தடைதாண்டியோட்டம் வெண்கலப்பதக்கம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com