ஃபேஸ்புக்கின் மதிப்பு US$140 பில்லியன்
சமூக இணையத்தளமான ஃபேஸ் புக் பங்கு நேற்றைய நிலவரப்படி 38 அமெரிக்க டாலருக்கு விலைபோனது. அந்தப் பங்குகள் வாயிலாக 16 பில்லியன் திரட்டிய ஃபேஸ்புக்கின் மொத்த சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
சமூக இணையத்தள நிறு வனங்களின் பங்குச் சந்தையில் இந்த அளவு அதிகமாக விலைபோனது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதனால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸŸக்கர்பெர்க் உலகப் பணக்காரர்களில் 29வது இடத்தில் உள்ளார். தற்போது கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரை மிஞ்சிவிட்டார்.
421 மில்லியன் பங்குகளை 38 அமெரிக்க டாலர் விலையில் பொதுமக்களுக்காக திறந்து விட்டது. ஃபேஸ்புக் பங்கின் விலை கூடியவிரைவில் 44 அமெரிக்க டாலராக விற்கப்படலாம் என்று நிதித்துறை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
0 comments :
Post a Comment