பல மனித உயிர்களை காவு கொண்ட யானை மடக்கிப் பிடிப்பு
ஹம்பாந்தோட்டை நகருக்கு அருகில் கட்டுவௌ ஆறுபொக்க பிரதேச மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி, பல மனித உயிர்களை காவு கொண்ட யானையொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த யானையினால், கடந்த காலங்களில் ஹம்பாந்தோட்டை நகருக்கு அருகில் கட்டுவௌ ஆறுபொக்க பிரதேச மக்கள் பெரும் பீதியுடன் வாழ்ந்து வந்துள்ளதுடன், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் இந்த யானையால் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமனறி சொத்துகள் மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு, சேதம் விளைவித்த குறித்த யானை பிரதேச வாசிகளுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததுள்ளது. இதனால் குறித்த யானையை பிடிப்பதற்கு நடவடிக்கையை ஆரம்பிதத வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள், கடும் முயற்சியின் பின்னர் மயக்க மருந்து செலுத்தி, இந்த யானை பிடிகத்துள்ளனர்.
இந்த யானை, மக்கள் நடமாட்டம இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று, விடுவிக்கப்படுமென, திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment