சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கு, நாடளாவிய ரீதியில் நடவடிக்கை
சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிப்ப தற்காக, ஐக்கிய நாடுகள் சிறுவர் அபிவிருத்தி இணைப்பு நிதியம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கினங்க நாடளாவிய ரீதியில் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தினூடாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் அவதானத்தை ஏற்படுத்துவதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment