இன்று முதல் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் தொடர்பான புதிய சட்டவிதிகள் அறிமுகம்
முச்சக்கர வண்டிகளில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பான சட்ட விதிகள், இன்று முதல் கடுமையாக அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன், விதி களை மீறுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், அத்தி யட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கையில் முச்சக்கர வண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும், அதிகளவு பயணிகள் பயணம் செய்கின்றனர். மோட்டார் சைக்கிளொன்றில் பொதுவாக இரண்டு பேரும், முச்சக்கர வண்டியில் சாரதி உள்ளிட்ட 4 பேருமே பயணம் செய்ய முடியும். விதிகளை மீறி பயணம் செய்வதால், விபத்துகள் இடம்பெறுவதுடன், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகும்.எனவே இவ்விடயம் தொடர்பில் நாங்கள் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இச்சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு மட்டுமல்லாமல், வாகனத்தின் உரிமை யாளருக்கு எதிராகவும், சட்ட நடவடிககை எடுக்கப்பட வுள்ளதாகவும், தொடர்ந்தும் இவ்வாறான தவறுகளை இழைக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்கப்படுவதுடன், அவர்களது சாரதி அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வதற்கும், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment