Saturday, May 5, 2012

முன்னாள் பெண்புலி உறுப்பினர் தன்னை தானே தீ மூட்டி தற்கொலை.

வடமராட்சியின் பொலிகண்டி பாலாவியில் புலிகளின் முன்னாள் மூத்த பெண் உறுப்பினர் ஒருவர் தன்னைத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலிகண்டி பாலாவியிலுள்ள மீள் குடியேற்ற முகாம் ஒன்றில் இவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் (03) வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண்ணெய்யை ஊற்றி, தீமூட்டி இறந்துள்ளார். இவரது சடலம் மந்திகைப் பொலிசாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புலிகளின் நீண்டகால மூத்த பெண் போராளியாக இருந்த இவர் 1999 ஆம் ஆண்டு கால யுத்தத்தின் போது பலத்த காயங்களுக்கு உள்ளாகி இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார்.

எனினும், 2009 ஆம் ஆண்டுவரை புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17 ஆம் திகதியின் பின் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com