இலக்கினை பூர்த்தி செய்யாத தொகுதி அமைப்பாளர்களை நீக்க ஐ.தே.கட்சி நடவடிக்கை
இலக்கினை பூர்த்தி செய்யாத கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்கம் செய்ய ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்குகளை பூர்தி செய்யாத அமைப்பாளர்கள் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி அமைப்பாளர்களால் கட்சியின் செயற்குழுவுக்கு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment