Wednesday, May 9, 2012

சீதுவை பிரதேசத்தில் இளைஞர் கொலை

சீதுவை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞரின் சடலம் இன்று காலை 9 மணியளயவில் சீதுவை – தம்பதுரை பிரதேசத்தில் உள்ள இளைஞரின் வீட்டு அறையொன்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சுங்கீத் சனத் புஷ்பகுமார என்ற 29 வயதுடைய நபரே இனந் தெரியாதவர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.

இவரது முகத்தில் கூரிய ஆயுதங்களினால் மேற்கொள்ளப்பட்ட 5 காயங்கள் இருப்பது விசாரணகளின் போது தெரிய வந்தது.

இதேவேளை, இன்று முற்பகல் சம்பவ இடத்துக்கு சென்ற நீர்கோழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜிந்ரா ஜயசூரிய விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com