ஐ.நா அணு சக்தி ஆய்வாளர் விபத்தில் பலி
ஐக்கிய நாட்டு சபையின் அணுசக்தி ஆய்வாளர் ஆக் சியோக் ஈரானில் நடந்த கார் விபத்தில் பலியானார். ஈரான் நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகளை ஐக்கிய நாட்டு சபையின் அணு சக்தி முகமை குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இக்குழுவில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆக் சியோக் இடம்பெற்றிருந்தார்.
ஆக் சியோக் மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரும் சென்று கொண்டிருந்த கார், சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
இதில் அணு சக்தி முகமை ஆய்வாளார் ஆக் சியோக் பலியானார். இதனை ஈரானின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment