சீன பிரஜைகள் மூவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் மூவரை நாடு கடத்துவதற்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசா முடிவடைந்த நிலையிலும், கடவுச்சீட்டு இல்லாத நிலையிலும், இலங்கையில் தங்கி யிருந்ததாக, கொள்ளுபிட்டி பொலிஸா ரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மூவரும், கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இவர்களை நாடுகடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமைக்காக, குறித்த சந்தேக நபர்களை, நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment