இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்.
எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கவல்ல ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை போன்று இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ள சரஸ்வரத், 2,000 கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழிக்கும் சோதனையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், வரும் 2016 ஆம் ஆண்டில் இது 5,000 வரை நீட்டித்து மேம்படுத்தப்படும் என்றும் கூறியுள்ள சரஸ்வரத், நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் இதனை நிறுவுவதற்கு டி.ஆர்.டி.ஓ. தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment