இலங்கையின் பால்மா எறிகணை ஈராக்கின் எறிகணையை விட பயங்கரமானது.
பால்மா, கேஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அசாதாரண முறையில் மேலே உயர்த்தி அரசாங்கம், மக்களுக்கு எதிராக நேரடியாகத் தாக்கும் எறிகணையைப் போன்று ஈராக்கில் கூட எறிகணை வீசப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறினார்..
உயர்ந்து கொண்டு போகும் வாழ்க்கைச் செலவுக்குக்கு முகம் கொடுக்கும் வண்ணம் சம்பளத்தை உயர்த்துதல், தோட்ட மக்களுக்கு போதியளவு சம்பளம், விவசாயிகள்-மீனவ மக்களுக்கு உதவி செய்தல் போன்ற வேலைத்திட்டங்களை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அநீதியைத் தோற்கடிக்க வேண்டும், எறிகணை வீச்சு போன்ற விலையுயர்வு மற்றும் வெள்ளை வேன் கலாச்சாரம் நிலவும் சமூகத்தில் மக்களுக்கு வாழ்க்கை நடாத்துவது மிகக் கடினமானது என்று சுட்டிக்காட்டிய திரு விக்கிமசிங்க, காட்டுச் சட்டத்தைத் தோற்கடித்து நாட்டில் ஜனநாயக, தேசிய அமைதியை உருவாக்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது திரு விக்கிமசிங்க இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment