கிழக்கு மாகாணத்தில் பிரதியமைச்சரின் செயலாளர் காணியை அபகரிக்கின்றார்.
பிரதியமைச்சர் ஒருவரின் செயலாளரான முன்னாள் புலி உறுப்பினர் தலைமையிலான குழுவொன்று, ஏறக்குறைய 300 ஏக்கர் காணியை பொத்துவிலில் உள்ள ஊறணியில் கடந்தவாரம் கைப்பற்றியுள்ளது என்று அந்தப் பகுதி குடியிருப்பாளரகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் எந்தவித நிரந்தரக் கட்டிடத்தையும் எழுப்பக் கூடாதென்று, அங்குள்ள உணவுச்சாலைகளின் (ஹோட்டல்கள்) உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏற்கனவே அப்பகுதி வாழ் மக்களை இந்தக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.
காணிக்கு உரிமை கோரிக் கொண்டு எங்களைத் துரத்துவதற்காக தனிப்பட்டவர்களால் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. எங்களிடம் காணி உறுதிகள் இருக்கின்றன, எங்கள் உறுதிகள் மாசற்றவை, அவைகளைக் கச்சேரியில் சரிபார்க்கலாம் என்று கடற்கரைக் கபானாக்களை வாடகைக்கு விடும் ஒருவர் கூறினார். மே 3-ம் திகதி பிரதியமைச்சரின் ஆதரவுடனான ஒரு குழு வெளியாரான அளவையாளர் ஒருவரை அழைத்து வந்தது, காணியை அளந்து வரைந்தது. எந்த விமான நிரந்தர' கட்டிடத்தையும் அமைக்க வேண்டாம் என்று எங்களை எச்சரித்தது. எவ்வாறு நாங்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறுவதற்கு மூன்று நாட்களின் பின்னர் வருதாக அவர்கள் கூறினார்கள்.
0 comments :
Post a Comment