அரசியல் தஞ்சம் என்ற பெயரில் தங்கியிருக்கும் வெளிநாட்டார் மீது வலை வீச்சு.
அரசியல் தஞ்சத்தில் இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்புவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்று தெரிய வருகின்றது.
அரசியல் தஞ்சம் என்ற அடிப்படையில் பல்வேறு காரணங்களின் பேரில் 500 க்கு மேற்பட்டோர் இங்கு வந்து வசிக்கின்றனர் என்று குடிவரவு-குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிய வந்துள்ளது.
அவர்களில் பாகிஸ்தானியர், சீனர், ஆப்கானித்தானியர். மாலைதீவுக்கார் அடங்குவதாகத் தெரிகின்றது. இவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பு இலங்கையில் வந்து தங்கியிருக்கிரார்கள். சமீபத்தில் அவர்கள் விடயத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதற்கு மேற்படி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடரபாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் நிர்வாக நாயகம் சூலானந்த சில்வாவைத் தொடர்பு கொள்ளும் முயற்சி பலனிக்கவில்லை.
0 comments :
Post a Comment