இஸட் புள்ளிகள் பற்றி ஆராய ஆணைக்குழு
பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இஸட் ஸ்கோர் முறையை தொடர்ந்தும் பாவிப்பதா அல்லது வேறு மாற்று முறையொன்றை கையாள்வதா என்பது குறித்து தீர்மானத்தை எடுப்பதற்காக ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.
மாணவர்களுக்கு அநீதி நேர்வதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இஸட் புள்ளி முறையை மாற்றுமாறு பெற்றோர் உட்படபல் வேறுதரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும், அடுத்த கல்வியாண்டுக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, நுண்கலைகள் பல்கலைக்கழக செயல்முறை பரீட்சைகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை அமைச்சர் முற்றாக நிராகரித்தார். நுண்கலைகள் பல்கலைக்கழக அனுமதிக்கான செயல்முறை பரீட்சைகளே கைவிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment