கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்பாட்டை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கும் செயற் றிட்டத்தை காண்பதற்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பொது மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை துறைமுக அதிகார சபையின் விகாரை வீதியில் உள்ள நுழைவாயில் ஊடாக கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கும் பகுதிக்கு செல்வதுடன் அங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய நீரூடான பாதையில் பொதுமக்கள் பயணிக்க முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்பொருட்டு விசேட போக்குவரத்து சேவையும் துறைமுக அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment