ஜப்பானிய உதவி பிரதமர் நாளை இலங்கை வருகை
ஜப்பானின் உதவி பிரதமர் கட்சுயா ஒகாடா இரண்டு நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.
அவர் தமது விஜயத்தன் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவிருப்பதுடன்,கண்டி தலதா மாளிகைக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன், அவர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவிருப்பதாக வெளியுறவுகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment