ஐ.தே.கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமனறம் அழைக்கின்றது
அமெரிக்கா நீதிமன்றத்தில் சிறை தண்டனை குற்றவாளியான வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட மில்லியன் பெறுமதியான டொலர்களை அந்நிய செலாவணி சட்டத்தை மீறி, இலங்கையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட உதவியாக இருந்தார் என்ற குற்றத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிடட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நிதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment