தொப்பிகல நீர் வீழ்ச்சியில் மூழ்கி இரு இளைஞர்கள் மரணமாகினர்.
மட்டக்களப்பு கிராண் தொப்பிகல வீதி அருகிலுள்ள நீர்வீழ்ச்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இரு இளைஞர் களும் மற்றும் இரு யுவதிகள் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்தனர். இவர்களில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர். வாழைச்சேனை கண்ணகிபுறத்தில் வசிக்கும் 18 வயதான கேதீஸ் மற்றும் கே.திலிப்குமார் ஆகிய இளைஞர்களே இவ்வாறு மரணமடைந்தனர்.
இவர்கள் நீர் வீழ்ச்சியில் விழுந்ததும் உடனடியாக இராணுவ வீரர்கள் சிலர் இவர்களை காப்பாற்ற முயற்சித்ததுடன், அவர்களினால் யுவதிகளின் உயிரை மாத்திரமே காப்பற்ற முடிந்தது. வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment