உதயன் பத்திரிகையிடம் ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கோரி டக்ளஸ் தேவானந்தா வழக்குத் தாக்கல்
உதயன் பத்திரிகை வெளியிட்ட செய்தி ஒன்றுக்காகத் தனக்கு ஆயிரம் கோடி ரூபா நட்டயீடாகத் தருமாறு கேட்டு பாரம்பரிய சிறுகைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக 1000 கோடி ரூபா நட்டஈடு மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரையில் அதற்கான வட்டி, வழக்குச் செலவு ஆகியனவும் தரப்பட வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை உதயன் சட்டப்படி எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை மாதத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.
0 comments :
Post a Comment