மின்னல் தாக்கி இளைஞர் படுகாயம் கிளி-; பன்னங்கண்டியில் சம்பவம்
கிளிநொச்சி பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒரு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் பன்னங்கண்டியைச் சேர்ந்த குருகுலராஜா முகுந்தன் வயது 16 என்றவரே படுகாயமடைந்தவராவார்.மழை நேரம் இளைஞர்கள் கூட்டாக விளையாடிக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கடுமையாக காது பகுதியில் காயமடைந்த நிலையில் உடனடியாக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார்.
0 comments :
Post a Comment