தண்டனை பெற்று விடுதலையானவர்களே மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்- சமன் சிஹேரா
குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று விடுதலையானவர்களே மீண்டும் மீண்டும் குற்றம் புர்pகின்றனர் என யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப்பொலிஸ் அதிகாரி சமன் சிஹேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
அரசியல் ரீதியான குற்றவாளிகளைப் பாதுகாக்க எந்த விதமான அழுத்தங்களும் பொலிஸார் மீது திணிக்கப்படவில்லை.
தமிழ் மொழியில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கள மொழியல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டால் என்னிடம் நீங்கள் முறையிடலாம்.
யாழ்ப்பாணத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட போதைப்பொருள் கஞ்சா போன்றவற்றை பொலிஸார் கட்டுப்படுத்தியுள்ளனர்.
தற்போது நடைபெறுகின்றன குற்றச்செயல்களை குற்றச்செயல்களுக்கான தண்டனை பெற்று விடுதலையானவர்களே மேற்கொள்ளுகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களை நாம் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
0 comments :
Post a Comment