பளைக்கும்-காங்கேசன் துறைக்கும் இடையிலான புகையிரத பாதை புனரமைப்பு ஆரம்பம்
பளைக்கும் - காங்கேசன் துறைக்கும் இடையிலான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த இரண்டு பிரதேசங்களுக்கு மிடையிலான சுமார் 56 கிலோ மீற்றர் பாதை புனரமைக்கப்படவுள்ளது. இதேபோன்று யாழ்.பிரதான ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனோடு மிருசுவில், சாவகச்சேரி ரயில் நிலையங்களின் பழைய கட்டிடங்கள் இடித்தழிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகாலம் ரயில் பாதை புனரமைப்பு பணிகள் குறித்த பேச்சுக்கள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் நிறைவுபெறும் என தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment