மஞ்சள் கடலில் சீனா- ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி
சீனாவும் ரஷியாவும் கிழக்கு சீன கடற்பரப்பான மஞ்சள் கடற்பகுதியில் கூட்டுக் கடற்படை பயிற்சியை இன்று முதல் மேற்கொள்கின்றன. கூட்டுக் கடற்படைப் பயிற்சிக்காக ரஷிய கப்பல்கள் நேற்று சீனாவின் சிங்தா துறைமுகத்தை வந்தடைந்தன. மஞ்சல் கடல் பகுதியைச் சுற்றி வடகொரியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் இரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இப்பயிற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷிய கடற்படையின் துணை முதன்மை தளபதி சுக்னோவ், இது ஒரு அரிய வாய்ப்பு என்றர்.
இன்று முதல் வரும் 27-ந் தேதி வரையில் மஞ்சள் கடல் பகுதியில் வான் தாக்குதல், கடலில் பொருட்களை வழங்குதல், கடல் வழி ஊடுருவலை எதிர்ப்பது, கடலில் மீட்புதவி ஆகியவை தொடர்பாக இருநாட்டு கடற்படையும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
சீனாவின் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 16 போர்க் கப்பல்கள் இதில் பங்கேற்கின்றன.
அண்மையில் தென்சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸூம் அமெரிக்காவும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment