டெங்கினால் மூன்று மாத காலப்பகுதியினுள் 9402 பேர் பாதிப்பு
டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாத காலப்பகுதியினுள் டெங்கு காய்ச்சல் காரணமாக 9 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் (2011) முதல் மூன்று மாத காலப்பகுதியினுள் டெங்கு காய்ச்சல் காரணமாக 3 ஆயிரத்து 103 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியினுள் 43 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment