Friday, April 6, 2012

கண்டி யாழ்ப்பாணம் ஏ-9 பாதை அபிவிருத்திச் செய்ய 1913 கோடி ரூபா

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான ஏ- 9 பாதையை அபிவிருத்தி செய்வதற்கு ரூபா 1913 கோடி ரூபா நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஏ-9 பாதையில் கல்குளத்திலிருந்து பனிச்சன் குளம் வரையிலான பாதையின் பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக 9592 கோடி ரூபாவும் பனிச்சன்குளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்வதற்காக 9532 கோடி ரூபாவும் நிதி மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஏ-9 மூலம் அபிவிருத்தி செய்வதற்கு கடந்த பெப்வரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு அகஸ்ட் மாதத்தின் போது நிறைவு செய்தற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com